Saturday, 19 November 2011

ப்ளாக்கில் Page Number இணைப்பது எப்படி?


நாம் வலைபதிவில் அதிகமாக  பதிவு எழுதியிருந்தால் அவற்றை படிக்க வருபர்கள் அதிக நேரம் செலவிட்டு படிக்க வேண்டியிருக்கும்.  அதற்க்காக அவர்கள் சில பக்கங்களை படித்துவிட்டு நேரம் இருக்கும் போது விட்ட பக்கத்திற்க்கு செல்ல‌ பக்க
என்னை அழுத்தி செல்வதற்க்காக பக்க என்
இனைத்தால் நம் வலைப்பதிவிற்க்கு வருபவர்கள் சுலபமாக வேண்டிய பக்கத்திற்க்குச் சென்று பதிவுகளை விட்ட இடத்தில் இருந்து படிக்க முடியும்.   இந்த Page Number இணைப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

முதலில் Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.

<style type='text/css'>
#blog-pager{padding:5px 0 !important;}
.showpageArea {font-weight: bold;margin:5px;}/* www.way2blogging.org */
.showpageArea a {text-decoration:underline;color: #fff;}/* www.way2blogging.org */
.showpageNum a, .showpage a {color: #fff;text-decoration:none;border:1px solid #999;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px; margin:0 3px;padding:3px 5px; background: #3b679e; background: -moz-linear-gradient(top, #3b679e 0%, #2b88d9 50%, #207cca 51%, #7db9e8 100%); background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#3b679e), color-stop(50%,#2b88d9), color-stop(51%,#207cca),  color-stop(100%,#7db9e8)); filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#3b679e', endColorstr='#7db9e8',GradientType=0 ); }/* www.way2blogging.org */
.showpageNum a:hover, .showpage a:hover {border: 1px solid #ccc; background: #aebcbf; background: -moz-linear-gradient(top, #aebcbf 0%, #6e7774 50%, #0a0e0a 51%, #0a0809 100%); background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#aebcbf), color-stop(50%,#6e7774), color-stop(51%,#0a0e0a), color-stop(100%,#0a0809)); filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#aebcbf', endColorstr='#0a0809',GradientType=0 ); }/* www.way2blogging.org */
.showpagePoint {color: #aaaaaa;text-decoration:none;border:1px solid #999;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px; margin:0 3px;padding:3px 5px; background: #e2e2e2; background: -moz-linear-gradient(top, #e2e2e2 0%, #dbdbdb 50%, #d1d1d1 51%, #fefefe 100%); background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#e2e2e2), color-stop(50%,#dbdbdb), color-stop(51%,#d1d1d1), color-stop(100%,#fefefe)); filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#e2e2e2', endColorstr='#fefefe',GradientType=0 ); }/* www.way2blogging.org */
.showpageOf {text-decoration:none;padding:3px;margin: 0 3px 0 0;}/* www.way2blogging.org */
.showpageNum a:link,.showpage a:link {text-decoration:none;color:#fff;}/* www.way2blogging.org */
</style>
<script type='text/javascript'>
var home_page="/";
var urlactivepage=location.href;
var postperpage=8;
var numshowpage=10;
var upPageWord ='Previous';
var downPageWord ='Next';
</script>
<script src='http://bloggerblogwidgets.googlecode.com/files/way2blogging_bloggerpagenavi.js' type='text/javascript'></script>


பின்னர் Save பட்டனை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் வலைபதிவில் அழகான பக்க என் இணைந்திருக்கும்.

நன்றி...

Sunday, 6 November 2011

google + பயனுள்ள குறுக்குவிசைகள் ( short cut keys)


  

இன்றைய இணைய உலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக கூகிள் + இருக்கிறது, அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே அசுர வளர்ச்சி அடைந்தது கூகிள் +, இதில் தரப்பட்டுள்ள வசதிகள் அருமையாக உள்ளன, குறிப்பாக ஸ்ட்ரீமிங் இல்லாமல் இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, கூகிள் +ல் உபயோகிக்ககூடிய குறுக்கு விசைகளை(short cut keys) பற்றி இங்கே காண்போம்.

1) Space Bar
 
இதனை நீங்கள் தட்டினால் பக்கமானது ஸ்க்ரோல் டவுன்(Scroll Down) செய்யப்படும்.

2) Shift+Space bar
 
இதனை நீங்கள் தட்டினால் பக்கமானது ஸ்க்ரோல் அப்(Scroll Up) செய்யப்படும்.

3) J
 
இதனை நீங்கள் தட்டினால் ஒரு இடுகை மட்டும் ஸ்க்ரோல் டவுன்(Single Post Scroll Down) செய்யப்படும்.

4)  K
 
இதனை நீங்கள் தட்டினால் ஒரு இடுகை மட்டும் ஸ்க்ரோல் அப்(Single Post Scroll Up) செய்யப்படும்.

5) Q
 
இதனை நீங்கள் தட்டினால் சாட் விண்டோவிற்கு தாவும்.

6) Enter
 
இதனை ஒரு இடுகையை படிக்கும்போது தட்டினால் பின்னூட்ட பெட்டி(to open Comment Box) திறக்கும்.

7) Tab+Enter
 
இதனை நீங்கள் தட்டினால் பின்னூட்டம் பதிவேற்றப்படும்.(To Post The Comment).
|

உங்களுடைய TEXT FILE களை பேச வைக்கலாம்



நீங்கள் E-MAIL அல்லது ஒரு இணையத்தளத்தில் உள்ளவற்றை படிக்க சிரமபட்டாள் நீங்கள் அந்த வரிகளை ஒரு Text File-லில் Copy செய்து விட்டு இந்த SOFTWARE மூலம் அதை கேட்க்கலாம்.

இதனால் படிக்கின்ற வேலை உங்களுக்கு மிச்சம் ஆகிறது.இந்த Text File-லை நீங்கள் WAV,MP3 or VOX Files ஆக Convert செய்து சேமித்து வைத்து கொள்ள முடியம்.

இந்த மென்பொருளை உங்கள் COMPUTER இல்  Instal செய்த பின்பு அந்த மென்பொருளை Open செய்யவும்.

படத்தில் உள்ளது போல


பின்பு அந்த மென்பொருள்லில் உள்ள Open எனும் Option-ய் பயன்படுத்தி ஒரு Text File-ய் Open செய்து விட்டு. கீழ உள்ள  play பட்டனை அழுத்தினால் உங்கள் Text File படிக்கப்படும்.

தரவிறக்க சுட்டி

வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கணனியை பழைய நிலைக்கு கொண்டுவர ..!




பயன்படும் அனைத்து மென்பொருட்களையும் பரிசோதனை செய்து பார்க்க கணனியில் நிறுவிவீர்கள். நாளடைவில் அவற்றை கிளீனிங்க் செய்வதற்கு சிரமங்களை எதிர்நோக்கலாம்.
மேலும் அடிக்கடி கணனியில் மாற்றங்கள் செய்து பரீட்சிக்கும் ஒருவராயின் ஏதாவது பிழை விட்டு விட்டால் கணனியை முன்பிருந்த நிலைக்கு கொண்டுவருவது எப்படி?

அல்லது உங்கள் கணனி கடுமையான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அவற்றை நீக்கி பழைய நிலைக்கு கணனியை கொண்டு வருவதுஎப்படி?

இது போன்ற பல பிரச்சனைகளில் விடுபடவே உதவுகிறது Wondershare Time Freeze எனும் ஒரு மென்பொருள். ஒரு குறிப்பிட்ட நிலை வரை நீங்கள் கணனியில் செய்த அனைத்து மாற்றங்களையும் அதன் பழைய நிலைக்கே கொண்டு வந்து விடுகிறது.

இந்த மென்பொருள் மூலம் ‘freeze’ state என்ற செட்டிங்கை அமைத்து விட்டு கணனியில் என்ன வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யலாம். அனைத்து மாற்றங்களும் கணனியை ரீஸ்டாட் செய்யும் போது அண்டூ செய்யப்பட்டு அதன் பழைய நிலைக்கு வந்துவிடும்.

இந்த மென்பொருள் மூலம் குறிப்பிட்ட பால்டர்களை பாதுகாக்கவும் முடிகிறது.



தரவிறக்கசுட்டி

google இன் இலவச மென்பொருட்களை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய




கூகுள் தளம் வாசகர்களுக்காக சில பயனுள்ள மென்பொருட்களை அளிக்கிறது. இந்த மென்பொருட்களை எவ்வாறு டவுன்லோட் செய்வது என பார்ப்போம். இந்த பட்டியலில் கூகுளின் மென்பெருட்கள் மட்டுமின்றி கூகுல் பரிந்துரை செய்யும் சில பயனுள்ள மென்பொருட்களும்(Firefox, Avast, Skype....) உள்ளன. இந்த மென்பொருட்களையும் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த Packல் 14 இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின் மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள். விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை நிறுவலாம்.
  •     இந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்ய கீழே கொடுத்துள்ள லிங்கில் செல்லுங்கள்.
  •     உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் இதில் மென்பொருட்களின் பட்டியல் இருக்கும்.
  •     அதில் உங்களுக்கு தேவையான உங்கள் கணினியில் இல்லாத மென்பொருட்களை டிக் செய்து கொள்ளுங்கள்.


  •  தேவையானதை டிக் செய்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் டிக் செய்த மென்பொருட்கள் உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகிவிடும்.
  •     பின்பு இன்ஸ்டால் செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இதில் உள்ள மென்பொருட்கள் பற்றி ஒரு சிறிய முன்னோட்டம் கீழே பார்ப்போம்.

Google Chrome - இணையத்தில் உலவுவதர்க்காக கூகுள் உருவாக்கிய இணைய உலவி ஆகும். உலகளவில் அதிகம் உபயோகிக்கப்படும் உலவிகளில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

Google Earth - உலகின் எந்த இடத்தையும் எளிதாக சுற்றி பார்க்கலாம் அதுவும் நிஜத்தில் இருப்பது போல. மற்றும் இந்த தளத்தில் Hotels, tourist place, driving directories போன்ற வசதிகளும் உள்ளது.

Google Apps - கூகுளின் சேவைகளான ஜிமெயில்,காலெண்டர் போன்ற சேவைகளை நம் கணினியில் பயன்படுத்து கூகுள் உருவாக்கிய மென்பொருளாகும்.

Google Toolbar for Internet Explorer - IE உலவியில் பயன்படுத்த கூகுள் உருவாக்கிய மென்பொருள். இதன் மூலம் தேவையில்லாத popups உருவாவதை தடுக்கலாம், இணைய படிவங்களை நிரப்ப Auto fill வசதியும் உள்ளது.

Spyware Doctor with Antivirus- கணினியில் உள்ள தீங்கிழைக்கும் Spyware, adware, trojans போன்றவற்றை நீக்கி கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ள.

Avast - கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ளும் இலவச ஆண்டி வைரஸ் மென்பொருளாகும்.

Immunet Protect Antivirus - கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ளும் இலவச ஆண்டி வைரஸ் மென்பொருளாகும்.

Google Desktop - கூகுளின் இன்னொரு பயனுள்ள மென்பொருள் நம்முடைய டெஸ்க்டாப் விண்டோவில் சைட்பாரில் கூகுளின் வசதிகளை உபயோகிக்கும் வசதி.

Google Picasa - நம்முடைய போட்டோக்களை எடிட் செய்யவும், நண்பர்களுடன் பகிரவும் கூகுள் உருவாக்கிய மென்பொருள்.

Adobe Reader - இது பெரும்பாலும் நம் அனைவரும் கணினியிலும் இருக்கும் ஒரு மென்பொருளாகும். PDF பைல்களை நம் கணினியில் பார்க்க அடோப் நிறுவனம் உருவாக்கிய மென்பொருளாகும்.

Mozilla Firefox - மிகப்பிரபலமான இணைய உலாவியாகும். கூகுள் க்ரோம் இந்த உலவியை பின்னுக்கு தள்ளி தான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

Google Talk - நம் நண்பர்களுடன் அரட்டை அடிக்க

Skype- குறைந்த விலையில் தொலைபேசி அழைப்பு பண்ணலாம்.

Real Player  - வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் மீடியா பிளேயார்.

WebM for IE9 - IE உலவியில் இணைய வீடியோக்களை காண மென்பொருட்கள் 

தரவிறக்க சுட்டி 

நாளந்த செயல்பாடுகளை தன்னியல்பாக மேற்கொள்ள உதவும் சிறிய மென்பொருள்



நாம் பல்வேறுபட்ட பணிகளை ஒவ்வொருவரும் தங்கள் கணினி மூலம் செய்கின்றோம். இருந்தாலும் நாளாந்தம் கணினியினை ஆரம்பித்தல், மூடுதல் மற்றும் ஈமெயில் களை திறந்து பார்த்தல், இனைய உலாவிகளுக்கு செல்லுதல் என பல பணிகளை நாளாந்தம் செய்கின்றோம். இத்தகைய நாளந்த பணிகளை நாம் சுலபமாக செய்ய ஒரு சிறிய அளவுடைய மென்பொருள் உதவுகிறது. அதுதான் RE MOUSE



இந்த மென்பொருளின் துணையுடன் MOUSE மற்றும் KEYBOARD செயல்பாடுகளை பதிவு செய்து கொள்வதுடன் அதே செயல்பாட்டினை மீண்டும் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இந்த மென்பொருளில் உள்ள PLAY பட்டன் மட்டும் கிளிக் செய்தால் போதும் அத்தனை வேலைகளையும் தானாகவே செய்துவிடுகிறது இந்த மென்பொருள் .

இதன் வசதிகள்  பதிவு செய்தவற்றை SAVE செய்து ஓபன் செய்து பெறலாம்.அத்துடன் உங்களுக்கு ஏற்றால் போல ரெகார்டிங் OPTION தெரிவுசெய்யலாம்.

தரவிறக்கசுட்டி

சில பயனுள்ள Command Prompt கட்டளைகள்




Command prompt என்பது கணனியில் மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாகும். இந்த Command prompt ஊடாக எமது கணணியை செயற்படுத்தமுடியும். இந்த Command prompt அன்னது எமக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை தரவல்லது. Command prompt இன் உதவியுடன் எமது கணணி குறித்த பல தகவல்களை பெற்றுகொள்ள முடியும். நாம் சில கட்டளைகளை  வழங்கினால் போதும் அவை குறித்த பல தகவல்களை நாம் பெற்றுக்கொள்ளமுடியும்.
அத்தகைய Command prompt இல் பயன்படுத்தி எமது கணனி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென சில கட்டளைகளை இங்கு தருகிறேன்.
முதலில் Command prompt ஐ திறந்து கொள்ளுங்கள்.
Command prompt ஐ திறந்துகொள்வதற்கான வழிமுறைகள் இதோ.
Start–>>Accesories–>>Command prompt
அல்லது
Start–>>Run  இல் cmd என தட்டச்சு செய்து திறந்துகொள்ளுங்கள்.
கீழ்வரும் கட்டளைகளை தோன்றும் Command prompt இல் தட்டச்சு செய்து கணணி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

1.கட்டளை: systeminfo
கணனியின் Host Name மற்றும் இயங்குதளம் குறித்த தகவல்கள் போன்ற இன்னும் பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

2. கட்டளை: driverquery
கணனியின் இயக்கிகள்(Drivers) குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

3. கட்டளை: subst W: C:windows

4. கட்டளை: tasklist
கணனியில் இயங்கிக்கொண்டிருக்கும் Programs குறித்த தகவல்களை பெறுக்கொள்ளமுடியும்.

5.கட்டளை: ipconfig /all
உங்கள் கணனியின் IP முகவரியினையும் மற்றும் வலையமைப்பு குறித்த தகவல்களையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

6. கட்டளை: net user
கணணி பயனாளர்கள்(User names) குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

நமது மின்னஞ்சல் கணக்கில் வேறு யாராவது விளையாடுகிறார்களா?




ஜிமெயில் பயனாளர்கள் பலர் ஒரு கணினியில் மட்டுமல்லாது பல கணினிகளில் ஜிமெயிலில் பணி புரிகிறார்கள். உதாரணமாக Browsing Centre, அலுவலக கணினி, வீட்டிலுள்ள கணினி, நண்பர்கள் அல்லது உறவினர்களின் கணினி போன்றவற்றில் மின்னஞ்சல் பணிகளை முடித்த பிறகு ஞாபகமறதியால் Sign out செய்யாமல் வந்து விடுகிறார்கள்.  இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். மொத்தமாக நாம் பணி செய்த அனைத்து கணினிகளிலிருந்தும்  ஒரே நேரத்தில் sign out  செய்ய இயலுமா?



மேலும் நமது மின்னஞ்சல் கணக்கில் வேறு யாராவது விளையாடுகிறார்களா? என்பதையும் நாம் அறிந்து கொள்ள ஜிமெயிலில் வசதி தரப்பட்டுள்ளது.

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். Inbox இன் கீழே உள்ள Last account activity என்பதற்கு நேராக உள்ள Details என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.



இனி திறக்கும் Activity Information விண்டோவில் உங்களது கடைசி ஐந்து லாகின் விவரங்கள் தரப்பட்டிருக்கும். இதிலிருந்து உங்கள் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய இயலும்.


மேலும் இதிலுள்ள Sign out all other sessions என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக மாற்ற  கணினிகளிலிருந்து ஒரே சமயத்தில் Sign out செய்து விட முடியும்.

இனி கண்ணாடி தட்டில் தகவல் சேமிக்கலாம்




ஆய்வொன்றின் மூலம் கண்ணாடித் தட்டுக்களில் தகவல்களை சேமிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ரான்ஸ்போமர் திரைப்படத்தில் கதாநாயகனால் ஏலத்தில் விடப்படும் அவனது தாத்தாவின் மூக்கு கண்ணாடியில் தரவு சேமிக்கப்பட்டிருப்பதாய் சித்தரித்திருப்பார்கள்.

அது தற்போது உண்மையாக்கப்பட்டுள்ளது.

Southampton University ஒளியியல் ஆராட்சிப் பிரிவினர் கண்ணாடி படிகத்தில் பாரிய அளவில் தகவல் சேமிக்கலாம் எனக் கண்டுபிடித்துள்ளனர்.

சிறிய கண்ணாடித் துகளில் 50GB இற்கு மேற்பட்ட அளவில் தகவல் சேமிக்க முடியும் என தெரிவித்த அவர்கள் இக் கொள்ளளவு புளூ ரே தட்டின் கொள்ளளவை விட அதிகம் என்பதை சுட்டிக்காட்டினர்.

லேசர் ஒளிக்கற்றை மூலம் கண்ணாடியினுள் சேமிப்பு நினைவகத்தை உருவாக்கலாம் என தெரிவித்தனர்.

முதற்கட்ட ஆராட்சிகள் வெற்றி பெற்ற நிலையில், கண்ணாடியிலான கணினி வன்தட்டுக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

லிட்டுவேனியன் கம்பெனியின் நிதி உதவியுடன் ஆராட்சி நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இவ் ஆராட்சி முற்றுப் பெறும் தருணத்தில் கணிணி தொழில்நுட்பத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துமென நம்பப்படுகிறது.

Toshiba வின் மிகச் சிறிய டேப்லெட்டை விரைவில்



 

கைக்கு அடக்கமான, இலகு எடை கொண்ட புதிய டேப்லெட்டை விரைவில் அறிமுகம் செய்கிறது தோஷிபா.
தோஷிபா த்ரைவ் என்ற இந்த மாடல் மிகவும் மெல்லிய எடை கொண்ட ஹேண்செட் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் யூஎஸ்பி போர்ட் வசதி உள்ளதால் கணினியில் இருந்து பதிவேற்றம் செய்து கொள்ள மிகவும் எளிதாக இருக்கும்



இந்த யூஎஸ்பி அனைத்து அளவிலும் உள்ளதால் எந்த விதமான கணினியிலும் பொருத்திக்கொள்ள முடியும்.

இதில், ஆன்ராய்டு ஹனிகோம்ப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளதாக வர இருக்கிறது. என்விஐடிஐஏ வசதி கொண்ட டெக்ரா சிப்செட் பிராசஸர் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும்.

இதன் விஷேச திரை உங்கள் கண்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாத வகையில் வீடியோக் காட்சிகளைக்கான உதவும்.மற்றும் இதில், வீடியோ விளையாட்டு பொழுது போக்கு அம்சமும் உள்ளது.

5 மெகாப்பிக்சல் வசதியின் மூலமாக துல்லியமான வீடியாக்காட்சிகளைப் படமெடுக்க முடிகின்றது.இதில் மல்டி டச் கொண்ட டச் ஸ்கிரீன் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு கேமராவின் மூலமாக வீடியாக்களை பதிவு செய்து கொள்ள முடியும். மற்றொரு கேமரா மூலமாக உங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் பார்த்து பேசும் வீடியோ காலிங் வசதியை தரும்.

இது போன்ற உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த டேப்லட்.இதில் வாடிக்கையாளர்களின் நன்மைக்காக நெட் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

மல்டி டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இந்த மாடல் புது விதமான நிறங்களில் வெளி வந்துள்ளது.

10.1 இன்ச் திரை கொண்டுள்ளது. நீங்கள் டைப் செய்து கொள்ள வசதியாக உள்ள நம்பர் பேட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் உள்ள அட்ஜஸ்மன்ட் மூலமாக இதன் ஒளியை எளிதில் கூட்டவோக் குறைக்கவோ முடியும்.

இதில் உள்ள யூஎஸ்பி மற்றும் புளூடூத் மூலமாக எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.இதில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் உழைக்கும் தன்மைக் கொண்டுள்ளது.

ஆகவே உங்களது பேச்சு துண்டிக்கப்படாமல தொடர்ந்து கொண்டே இருக்கும்.இதில் வைபை வசதி உள்ளதால் அதி வேகமாக நெட் வசதியைப் பெறமுடியும்.

Related Posts Plugin for WordPress, Blogger...