Thursday 27 October 2011

சீனா மொபைல்களை கொண்டு இணைய இணைப்பு பெறுவதற்கு





இன்று மொபைல் சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த சீன மொபைல்கள். டூப்ளிகேட் செய்வதில் வல்லவர்களான சீனர்கள் பிரபல கம்பெனிகளின் மொபைல்கள் போன்று அச்சு அசலாக உருவாக்கி பத்து மடங்கு விலை குறைவாக கொடுப்பதால் அனைவரும் அது போன்ற போன்களை உபயோகபடுதுகின்றனர்.  சீனா மொபைல் பயன்படுத்துபவரா

உங்கள் கணினியில் அதை இணைத்து இணைய இணைப்பு பெற இந்த மென்பொருள் உதவுகிறது


தரவிறக்க  சுட்டி 



Google Chrome இல் இலவசமாக 100 மேற்ப்பட்ட தமிழ் வானொலிகளை நேரடியாக கேக்கலாம்



இயந்திரமாய் மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இணையத்திலேயே நமது பெரும்பகுதி வாழ்க்கை கழிந்து விடுகிறது… இதன் காரணமாக நாம் நம்முடைய வாழ்வில் நாம் விரும்பிய தமிழ் வானொலி நிகழ்ச்சிகளை கேட்ப்பதற்கு  நேரம் கிடைப்பதில்லை.. இதுவும் இணையத்தில் கிடைக்காதா என்ற கவலை தேவை இல்லை.. இதற்கான சேவையை கூகுல் க்ரோம் (Google Chrome) உங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.. இதற்காக எந்த இணையதளத்திற்கும் செல்ல தேவை இல்லை… பிறகெப்படி இந்த சேவையை பெறுவது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. இதோ அதற்கான வழிமுறை…

1.முதலில் கூகுல் க்ரோம் (Google Chrome) உலாவியினை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்

2. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தள முகவரியினை சொடுக்கவும்..


      தள முகவரி



3. இப்பொழுது  Add to chrome என்ற பொத்தானை அழுத்தவும்.


4. கொடுக்கப்பட்ட extension Install ஆனதும் உங்கள் கூகுல் க்ரோம் (Google Chrome) உலாவியில்  ஐகான் (Icon) தோன்றும்.


5. அதில் உலகில் உள்ள  100 மேற்ப்பட்ட  தமிழ் வானொலிகளை நேரடியாக கேக்கலாம்

firefox யின் வேகத்தை எப்படி அதிகரிப்பது



  • mozila firefox  யின் வேகத்தை எப்படி அதிகரிப்பது அதை பற்றி பார்ப்போம்.
  • mozila firefox  யை open பண்ணி address bar இல் about:config  என டைப் செய்து enter கீ தட்டவும்.


  • அதன் பிறகு warning message வரும்.  அதில் I”ll be careful இருக்கும். அதை கிளிக்  செய்யவும்.
  • அதன் பிறகு Filter box இல் network என டைப் செய்து enter கீ தட்டவும் (படத்தை பார்க்கவும்).




  •  அதன்  பிறகு network.http.pipelining.max requests இதை கண்டுபிடித்து கிளிக்  செய்யவும்(படத்தை பார்க்கவும்).



  • அதன் பிறகு interger value message பாக்ஸ் ஓபன் ஆகும்.அந்த box இல் 10 என டைப் செய்து ok  கொடுக்கவும.
     
  •  mozila firefox  யை close பண்ணிவிட்டு மறுபடியும் mozila firefox யை open பண்ணவும். mozila firefox  வேகம் அதிகரித்திற்கும்.

தரவிறக்க firefox

Password இல்லாமல் நம் முகத்தைக் காட்டி நுழைய



கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்
நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு. கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது Hollywood படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.
இதற்காக பலமென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது. மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் Install செய்துகொள்ள வேண்டியது தான். Webcam அல்லது மடிக்கணினியுடன் வரும் Camera முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம்.
Windows Vista மற்றும் Windows7 Operating Systemல் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் Version கிடைக்கிறது. மென்பொருளின் அளவு 8.3 MB தான்.  கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்

இவ்  மென்பொருளை தரவிறக்க  சுட்டி

உங்கள் கணினியை ஆப்பிள் கணினி போல மாற்ற


நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்க்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் நாம் எப்படி ஒரு விண்டோஸ் கணினியை ஆப்பிள் ஆக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம்.

நாம் விண்டோவ்சின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக அப்பிளை போல மாற்றலாம் இதற்க்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும் பின்னர் கணினியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான்.

இந்த மென்பொருள் நம் கணினியை அப்படியே ஆப்பிள் கணினி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.

இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.பின்னர் உங்கள் கணினியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.

மேலதிக விளக்கத்திக்கு இந்த வீடியோவை பார்க்கவும்





தரவிறக்க சுட்டி 32 Bit

தரவிறக்க சுட்டி 64Bit

இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை அன்இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். உங்கள் கணினி முதலில் இருந்தது போல மாறிவிடும். 

இரகசிய குறியீட்டு இலக்கங்க




கைத்தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு குறியீட்டு எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் கைத்தொலைபேசியின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில குறியீட்டு எண்களை வகுத்து தந்துள்ளன. இது கைத்தொலைபேசி பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.



LG வகை கைத்தொலைபேசியின் குறியீட்டு எண்கள்



கைத்தொலைபேசியின் Test Mode க்கு செல்ல –– 2945#*#எல்ஜி கைத்தொலைபேசியின் ரகசிய Menu ஐக் கொண்டு வர – 2945*#01*#கைத்தொலைபேசியில் உள்ள மென்பொருள் தொகுப்பின் பதிப்பு எண் அறிய – *8375#கைத்தொலைபேசியின் IMEI எண்ணை அறிய –*#06# இது எந்த கைத்தொலைபேசிக்கும் பொருந்தும்.கைத்தொலைபேசியின் (LG 7010 மற்றும் 7020) Sim

Card lock சரி பார்க்க-2945#*70001#LG-B 1200 கைத்தொலைபேசியின் Sim Lock சரி செய்திட 1945#*5101#LG-B 5200 மற்றும் 510W கைத்தொலைபேசிகளின் Sim Lock Menu சரி செய்திட 2945#*5101#LG 500 மற்றும் 600 கைத்தொலைபேசிகளின் Sim Lock சரி செய்திட 2947#*



NOKIA தொலைபேசிகளுக்கான இரகசிய குறியீட்டு இலக்கங்கள் இவற்றின் மூலம் உங்கள் NOKIA கைத்தொலைபேசிகள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிழைகள் இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிழைகளின் தன்மையை அறிய உதவும்.



*#7780# –Restore Factory setting க்கு*#3283# -தொலைபேசி தயாரான தேதியை அறிந்து கொள்ள*#746025625# – Sim கடிகாரத்தை நிறுத்த*#67705646# -Operator Logo ஐ நிறுத்த*#73# – Reset Timer*#0000# –மென்பொருள் பதிப்பு குறித்து அறிய*#92702689# – தொலைபேசியின் உத்தரவாதம் குறித்த தகவல்களுக்கு (தொடர் இலக்கம் , எங்கு தயாரானது, வாங்கப்பட்ட தேதி, திருத்தம் செய்த திகதி)

SAMSUNG கைத்தொலைபேசிகளின் குறியீட்டு இலக்கங்கள்SAMSUNG தந்த பழைய கைத்தொலைபேசிகளுக்கு இது பொருந்தாமல் இருக்கலாம்.



*#9999# –தொலைபேசியின் மென்பொருள் பதிப்பை பற்றி அறிய#*3849# – Reboot செய்வதற்கு#*2558# – Time ON/OFF#*7337# – அண்மைக் காலத்தில் வெளியான கைத்தொலைபேசிகளை Unlock செய்திட#*4760# – GSM. வசதிகளை ON/OFF செய்திட*#9998*246# – Memory & Battery*#7465625# – மொபைலின் Lock எந்த நிலையில் உள்ளது என்று அறிய*#0001# – தொடர் இலக்கத்தை அறிய*2767*637# –Unlock செய்திட*#8999*636# –Storage திறனைக் காட்ட*2562# – Reboot செய்திட

உங்கள் ஆயுள்நாள்கள் பற்றி அறிந்துகொள்ள



சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாள் நரகமாகிவிடும் என்று சிவாஜியில் சூப்பர் ஸ்டார் சொல்லுவார்.நாம் ஏன் சாகும்நாள் தெரிந்துகொள்ளவேண்டும் .இதுவரை நாம்வாழ்ந்த நாளை-தேதி-மணி,நிமிடம்,வினாடி என அறிந்துகொள்ளலாம்.இதுமட்டும் அல்ல - நமது குழந்தைகள் பிறந்த நாளிலிருந்து இதுவரை அதன் வயதை அறிந்துகொள்ளலாம்.திருமணம் ஆகியிருந்தால் திருமணம் ஆகி எவ்வளவு நாள் ஆகின்றது என அறிந்து்காள்ளலாம்.நீங்கள் காதலிப்பவராக இருந்தால் காதலித்து எவ்வளவு நாள் ஆகின்றது என அறிந்துகொள்ளலாம்.400 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.



இதில் உள்ள Edit கிளிக் செய்து  நீங்கள் விரும்பும்  தேதியை தட்டச்சு செய்யவும். 



இதில் உள்ள Details கிளிக் செய்ய உங்களுக்கு மேல் உள்ள விவரங்கள் கிடைக்கும். அதில் நாள்-மணிநேரம்-வினாடி மற்றும் நொடிகளை அறிந்துகொள்ளலாம். இதுவரை வாழந்த நேரத்தினை அறிந்துகொண்டீர்கள்.இதற்கு முன் நான் பதிவிட்ட மரணதேதியை அறிந்துகொள்ள பதிவினை காண விரும்புபவர்கள் இங்கு கிளிக் செய்யவும் பயன்படுத்திப்பாருங்கள்

புதுமையான கினி ஆடியோ சிஸ்டம்




எல்இடி விளக்குடன் கூடிய புதிய மியூசிக் சிஸ்டத்தை கினி அறிமுகம் செய்ய உள்ளது.

பார்ப்பதற்கு சாதாரண குண்டு பல்பு போன்று இருக்கும் இதில் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 டபிள்யூ எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மியூசிக் ஸ்பீக்கர்களில் இருந்து பாடல்கள் ஒலிக்கும் போது இந்த லைட் எரிவதைக் காண முடியும். இந்த ஸ்பீக்கர் சிஸ்டத்தை ஐபோன், ஐபோட் போன்றவற்றில் இணைத்து அதன் மியூசிக் ட்ராக்ஸைக் கேட்க முடியும்.

இந்த மாடல் வயர்லெஸ் கனெக்ஷன் உடையது என்பதால் சுலபமாக எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கேட்கலாம். இதனுடைய இயக்கம் அனைத்தும் ஸ்டான்அலோன் யூனிட்டின் அடிப்படையில் இயங்குகிறது. இதில் லைட் சாக்கெட் டிவைஸ் உள்ளது.

இந்த பல்பை எடிசன் லைட் சாக்கெட்டிலும் பொருத்திக் கொள்ளலாம். இதனுடைய ஆடியோ சாதனத்தை ஆப்பிள்-பின் டாக்கிலோ அல்லது மற்ற ஆக்சிலரி இன்புட்டிலோ தாராளமாக பயன்படுத்தலாம். இந்த ஸ்பீக்கர் வித்தியாசமாக இருந்தாலும் இதனைப் பொருத்துவது மிகவும் எளிது என்று கினி நிறுவனத்தின் உயர் அதிகாரி ரையான் கியோனார்டோ கூறியிருக்கிறார் .

இதன் ஆடியோ பல்பு 5 வாட்ஸ் வரை எரியும் தன்மைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் இத்தகைய ஆவலைத் தூண்டும் மியூசிக் ஸ்பீக்கர் சிஸ்டம் வரும் அக்டோபரில் வெளிவர உள்ளது.

virus தாக்கிய fileஐ திரும்ப பெறுவது எப்படி?




நீங்கள் pen Drive உபயோகிப்பவராக இருந்தால் நிச்சயம் இந்த பிரச்சினைக்கு உட்பட்டு இருப்பீர்கள் .இனிமேல்  வைரஸ் தாக்கிய பைலை எப்படி திரும்ப பெறுவது என்று பார்ப்போம்.



1.pen Drive இல் இருந்த பைல் ஐ Antivirus  அழித்த பிறகு காணவில்லை

2.pen Drive இன் used space கூடதலாக காட்டுகிறது ஆனால் அதற்குறிய பைல் pen drive இல் இல்லை

3.நீங்கள் மீளப்பெற நினைக்கும் பைல் இப்படியாக இருக்க வேண்டும்.(.DAT,.FLV,.MP4,.VOB,.MP3,.ZIP,.RAR,.PDF,.HTML,.RTF,.DOC,.JPG,.PNG,.TXT.....)

4.நீங்கள் மீளப்பெற நினைக்கும் பைல் .exe இல் இருந்தால் மீளப்பெற முடியாது.

இந்த செய்திக்கு உங்கள் பிரச்சினை பொருந்தினால் நிச்சயமாக fileஐ திரும்ப பெறமுடியும் .
இதை நிச்சயமாக மீளப்பெற முடியும் என்பதற்குரிய காரணம் என்ன வென்றால் உங்களுடைய pen drive இல் ஒரு போல்டருக்குல் வைரஸ் இருந்தால் Antivirus software அந்த Virus ஐ அழித்து விட்டு அந்த Folder ஐ system Hidden செய்து விடும்.ஆனால் அந்த போல்டர் உங்களுடைய pen drive இல் தான் இருக்கிறது.system Hidden Folder ஐ எப்படி தெரிய வைப்பது என்று பார்ப்போம்.

start > control panel > folder Options > view

Show hidden files and folder என்பதை தெரிவு செய்து கொண்டு Hide protected operating system files [Recommended] என்பதை கிளிக் செய்யுங்கள்.ஒரு செய்தி வரும் அதற்கு yes என்பதை கொடுத்து விட்டு OK செய்து கொள்ளுங்கள்.







இப்போது உங்களுடைய pen Drive இற்குல் செல்லுங்கள் அந்த பைல் இருப்பதை காணலாம்.
இந்த செயலை மேற்கொள்ளும்போது நீங்கள் நல்ல antivirus பயன்படுத்துவது நல்லது பாதுகாப்பாகவும் இருக்கும்.

இலவசமாக Fax அனுப்ப சிறந்த 10 தளங்கள்





சில முக்கிய நகல்களை நாம் அவசரமாக அனுப்ப பேக்ஸ் மூலம் அனுப்புவோம். இதற்க்கு பணம் கொடுத்து தான் அனுப்ப வேண்டும். இலவசமாக அனுப்ப வேண்டுமென்றால் அந்த இயந்திரத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் இந்த குறைகளை தவிர்க்க ஆன்லைனில் இலவசமாக அனுப்பலாம். இதற்க்கு பத்து சிறந்த தளங்களை கீழே வரிசை படுத்தி உள்ளேன்.

1.eFax
இந்த தளத்தில் 30 நாட்களுக்கு சுமார் 180 பக்கங்களை இலவசமாக பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இந்த தளம் சுமார் 15 வருடங்களாக இந்த சேவையை வழங்கி வருகிறது. உலகளவில் 49 நாடுகளில் இந்த சேவை உள்ளது. 30 நாட்களுக்கு பிறகு மாத கட்டணத்தை வசூலிப்பார்கள்.

2. Super Fax
இந்த தளம் இந்திய அளவில் மிக பிரபலமான தளம். உங்கள் ஈமெயிலை இதன் மூலம் பேக்ஸ் அனுப்பலாம்.  இந்த தளத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே இலவசமாக பேக்ஸ் அனுப்ப முடியும். சுமார் 10 முறை பேக்ஸ் அனுப்பலாம்.

3. Faxmyway
இந்த தளத்தில் 5 நாட்களுக்கு இலவசமாக பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இதுவும் ஒரு இந்திய நிறுவனமாகும். ஒரே நேரத்தில் பல பேருக்கு பேக்ஸ் அனுப்பும் வசதி இந்த தளத்தில் உள்ளது.

4. Free Fax Gujarat4u
இது முழுக்க முழுக்க இலவச சேவையாகும். இதில் பேக்ஸ் அனுப்ப மட்டுமே முடியும், பெற முடியாது. உலகளவில் இலவசமாக இந்த தளம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்ப இயலும்.

5. Speed Fax
இதில் இலவசமாக மூன்று நாட்களுக்கு பேக்ஸ் அனுப்பியும் பெற்றும் கொள்ளலாம். இது ஒரு இந்திய நிறுவனமாகும். மூன்று நாட்களுக்கு பிறகு ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கான தொகையை கட்டினால் இந்த வசதியை தொடர்ந்து பெறலாம்.

6. Sendfreefax
இந்தியர்களுக்கென்று பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட தளமாகும். இதில் இந்திய அளவில் இலவசமாக கணக்கில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாக பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இதில் பேக்ஸ் அனுப்புவது மிகவும் சுலபமாக இருக்கும்.

7. Pop fax
 20 நாடுகளில் 500 நகரங்களில் இந்த வசதி செயல்படுகிறது. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் உங்கள் மொபைலில் இருந்து கூட பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இதுவும் உலகளவில் மிக பிரபலமான தளமாகும்.

8.faxzero
இதுவும் ஒரு இலவச சேவையாகும். இதில் கட்டண வசதியும் உள்ளது. இலவச சேவையில் தினமும் 2 பேக்ஸ் தான் அனுப்ப முடியும். மற்றும் இலவச சேவையில் நீங்கள் பேக்ஸ் அனுப்பினால் இந்த தளத்தின் லோகோ வாட்டர் மார்க்காக தெரியும். கட்டண வசதியில் இந்த பிரச்சினைகள் இல்லை.

9.Hello Fax
இந்த தளத்தில் பேக்ஸ் அனுப்பும் டாகுமெண்ட்டை எடிட் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த சேவை 30 நாட்கள் வரை செய்து கொள்ளலாம்.

10. Ring Central
இது உலகளவில் மிக பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் உங்கள் மொபைலில் இருந்து பேக்ஸ் அனுப்பலாம் உங்களுக்கு வரும் பேக்சை மொபைல் மூலம் பெறலாம். பிளாக்பெரி,ஐபோன் போன்றவைகளுக்கு மென்பொருள் இந்த தளத்தில் இருந்து தரவிறக்கி டவுன்லோட் செய்து கொண்டு இந்த வசதியை பயன்படுத்தலாம். 

computer games இலவசமாக தரவிறக்கம் செய்ய




அனைத்து கணணியிலும் எது இருக்கோ இல்லையோ கணணி விளையாட்டுகள் மட்டும் தவறாமல் இருக்கும்.

கீழே தரப்பட்டுள்ள நான்கு தளங்களிலும் நீங்கள் எதிலும் உறுப்பினர் ஆகவேண்டுமென்ற அவசியமில்லை. விளையாட்டின் முழு பதிப்பையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1. Free Game Pick: இந்த தளத்தில் 100% அனைத்து விளையாட்டுக்களையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் ஸ்பைவேர், மால்வேர் போன்ற பிரச்சினைகள் முற்றிலும் இல்லை.

இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த தளத்தில் ஓன்லைனில் விளையாடும் வசதியும் உள்ளது. பல நூறு விளையாட்டுக்கள் இந்த தளத்தில் நிரந்து காணப்படுகின்றன. இந்த தளத்தில் தரவிறக்கம் செய்வது சுலபமாக உள்ளது.

இணையதள முகவரி

2. Game Top: இந்த தளத்திலும் விளையாட்டுக்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் ஸ்பைவேர், மால்வேர் போன்ற பிரச்சினைகள் முற்றிலும் இல்லை. மனதிற்கு விருப்பமான நிறைய விளையாட்டுக்கள் இந்த தளத்தில் நிரந்து காணப்படுகின்றன.



Online Job for All
Work from home computer. Weekly payment via Paypal.
Click Here...


இந்த தளத்திலும் ஓன்லைனில் விளையாடும் வசதி காணப்படுகிறது. இந்த தளத்திலும் விளையாட்டின் முழு பதிப்பையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளமும் உங்கள் விருப்பமான தளமாக இருக்கும்.

இணையதள முகவரி

3. My Play City: மேற்கூறிய இரண்டு தளங்களிலும் உள்ள சிறப்பம்சங்கள் இதற்கும் பொருந்தும். ஓன்லைனில் விளையாடும் வசதி இதற்கும் உண்டு. தேவைப்படுபவர்கள் விரும்பிய விளையாட்டை தரவிறக்கம் செய்து விளையாடலாம்.

இணையதள முகவரி

4. Free ride games: தேவைப்படுபவர்கள் விரும்பிய விளையாட்டை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவி விளையாடலாம். இந்த தளத்திலும் உங்களுக்கு விருப்பமான விளையாட்டுக்களை தரவிறக்கம் செய்து மகிழலாம்.

இணையதள முகவரி

ஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண்



ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போல் மாற்ற உதவும் இலவச மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும் ஆனால் மொபைல் போன்களில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன, ஆனால் கணினியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

தறவிரக்க முகவரி 

மேலே கொடுத்திருக்கும் முகவரியை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும், உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்துவிட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man , Tiny Folks , Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதில் Tiny Folks என்பது கார்டூன் கேரக்டர் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் சாட்டிங்கில் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம் உண்மையிலே அவர் இது  போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக்கொண்டிருப்பார்.

கணணி வன்தட்டில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய !



அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்

தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய  checkdiskgui மென்பொருள் உதவி செய்கிறது.


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 

எந்தவொரு மென்பொருளின் துணையும் இல்லாமல் வீடியோ மெயில் அனுப்ப




எந்த ஒரு மென்பொருளையும் நம் கணனியில் நிறுவாமல் இலவசமாக ஓன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம்.

ஓன்லைன் மூலம் இலவசமாக வீடியோ மெயில் அனுப்ப நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இந்தத் தளத்திற்கு சென்று நாம் தளத்தின் முகப்பில் இருக்கும் Join now என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளவும்.

நம் பயனாளர் முகவரியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு எந்த மென்பொருளும் இல்லாமல் நம் உலாவி மூலம் வீடியோ இமெயில் அனுப்பலாம்.

ஓன்லைனில் வீடியோ சாட் செய்ய விரும்பும் நபர்களுக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். Download and save வீடியோ என்பதை சொடுக்கி வீடியோவை நம் கணனியில் சேமிக்கலாம்.

பிரபலமாக உள்ள அனைத்து மொபைல் போன்களிலும் நாம் இந்த வீடியோவைப் பார்க்கலாம். பெரிய நிறுவனங்கள் ஓன்லைன் மூலம் தற்போது வீடியோ சாட் பயன்படுத்தி நேர்காணலை நடத்துகின்றனர். வெளிநாட்டில் இருப்பவர்கள் எந்த மென்பொருளும் இல்லாமல் வீடியோ சாட் செய்யும் இந்த முறையை தற்போது பயன்படுத்துகின்றனர்.

இணையமுகவரி

USBக்கு password எப்படி உருவாக்குவது



நம்மிடத்தில்  உள்ள சில முக்கியமான dataகளையும் மற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம்பயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ஆகும். இவற்றில் அனைவரும் அதிகம் பயன்படுதுவது 
Pen Drive ஆகும்.
நம்முடைய PenDrive தகவல்களை மற்றவர்கள்  பார்க்காதவாறு செய்யலாம். நம்மிடம் உள்ள Pendrive க்கு password கொடுத்து இதை தடுக்க முடியும். அதற்க்கு நீங்கள் Ross Mini என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கி install செய்ய வேண்டும்.
இன்ஸ்டால் செய்த பின் Rohos Mini மென்பொருளை Open செய்யவும்.
 


அதில் Setup USB key என்பதனை click செய்யவும். Pendrive கணினியுடன் இணைக்கபட்டிருந்தால் Pendrive  அளவு தெரியும்

அதில் Change என்பதை கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில்
Disksiz மற்றும்File system போன்றவற்றை தேர்வு செய்யவும்.
பிறகு ok  செய்யவும். Password கொடுத்து Createdisk என்பதை  click செய்யவும்
Performing operation என்ற செய்தி screenல் தோன்றும்.
பின் இரண்டு நிமிடத்தில் Rohos Successfuly created என்ற செய்தி
திரையில் தோன்றும்
பின் Rohos Icon யை click செய்து, வரும் windowல்
 Conect disk என்பதனை click செய்யவும்.

Connectdisk என்பதை கிளிக் செய்தவுடன் வ்ரும் விண்டோவில் Password யை கொடுத்து. Pendrive யை Open செய்ய முடியும்.

Pendrive யை விட்டு வெளியே வரும் போது. Rohos Icon யை கிளிக் செய்து வரும் விண்டோவில் Tools என்பதனைகிளிக் செய்யவும்


 அதில் Disconnect என்பதை கிளிக் செய்து விட்டு வெளியேறவும்.
இனி USBக்கும் Password கொடுத்து பயன்படுத்த முடியும்.

தரவிறக்க சுட்டி 

virus உருவாக்குவது எப்படி



Warning - fork bomb இணை செயல் படுத்துவதன் மூலம் உங்கள் கணணி 500 செயல்களிஇல் ஒரே தடவையில் ஈடுபடும்.எதனால் உங்கள் கணணி சிறிது நேரம் செயல் இழந்து போகும் .
முதலில் NOTEPAD இணை திறவுங்கள்
பின்பு கிழே உளவற்றை TYPE செயுங்கள் /COPY செய்து பேஸ்ட் செய்யவும்
%0|%0

  

 அடுத்ததாக இதனை .bat எனும் வடிவில் சேமிக்கவும் (உதாரணமாக  -jaffnapc.bat)
 


(Warning  )  இறுதியாக நீங்கள் save செய்ததை  ஐ OPEN செய்யுங்கள் 



இனி உங்கள் கம்ப்யூட்டர் உறைந்துவிடும் .இனி நீங்கள் RESTART செய்தல் மட்டுமே இதிலிருந்து விடுபடலாம் .நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...