Sunday 6 November 2011

வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கணனியை பழைய நிலைக்கு கொண்டுவர ..!




பயன்படும் அனைத்து மென்பொருட்களையும் பரிசோதனை செய்து பார்க்க கணனியில் நிறுவிவீர்கள். நாளடைவில் அவற்றை கிளீனிங்க் செய்வதற்கு சிரமங்களை எதிர்நோக்கலாம்.
மேலும் அடிக்கடி கணனியில் மாற்றங்கள் செய்து பரீட்சிக்கும் ஒருவராயின் ஏதாவது பிழை விட்டு விட்டால் கணனியை முன்பிருந்த நிலைக்கு கொண்டுவருவது எப்படி?

அல்லது உங்கள் கணனி கடுமையான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அவற்றை நீக்கி பழைய நிலைக்கு கணனியை கொண்டு வருவதுஎப்படி?

இது போன்ற பல பிரச்சனைகளில் விடுபடவே உதவுகிறது Wondershare Time Freeze எனும் ஒரு மென்பொருள். ஒரு குறிப்பிட்ட நிலை வரை நீங்கள் கணனியில் செய்த அனைத்து மாற்றங்களையும் அதன் பழைய நிலைக்கே கொண்டு வந்து விடுகிறது.

இந்த மென்பொருள் மூலம் ‘freeze’ state என்ற செட்டிங்கை அமைத்து விட்டு கணனியில் என்ன வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யலாம். அனைத்து மாற்றங்களும் கணனியை ரீஸ்டாட் செய்யும் போது அண்டூ செய்யப்பட்டு அதன் பழைய நிலைக்கு வந்துவிடும்.

இந்த மென்பொருள் மூலம் குறிப்பிட்ட பால்டர்களை பாதுகாக்கவும் முடிகிறது.



தரவிறக்கசுட்டி

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...