Sunday 6 November 2011

Toshiba வின் மிகச் சிறிய டேப்லெட்டை விரைவில்



 

கைக்கு அடக்கமான, இலகு எடை கொண்ட புதிய டேப்லெட்டை விரைவில் அறிமுகம் செய்கிறது தோஷிபா.
தோஷிபா த்ரைவ் என்ற இந்த மாடல் மிகவும் மெல்லிய எடை கொண்ட ஹேண்செட் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் யூஎஸ்பி போர்ட் வசதி உள்ளதால் கணினியில் இருந்து பதிவேற்றம் செய்து கொள்ள மிகவும் எளிதாக இருக்கும்



இந்த யூஎஸ்பி அனைத்து அளவிலும் உள்ளதால் எந்த விதமான கணினியிலும் பொருத்திக்கொள்ள முடியும்.

இதில், ஆன்ராய்டு ஹனிகோம்ப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளதாக வர இருக்கிறது. என்விஐடிஐஏ வசதி கொண்ட டெக்ரா சிப்செட் பிராசஸர் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும்.

இதன் விஷேச திரை உங்கள் கண்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாத வகையில் வீடியோக் காட்சிகளைக்கான உதவும்.மற்றும் இதில், வீடியோ விளையாட்டு பொழுது போக்கு அம்சமும் உள்ளது.

5 மெகாப்பிக்சல் வசதியின் மூலமாக துல்லியமான வீடியாக்காட்சிகளைப் படமெடுக்க முடிகின்றது.இதில் மல்டி டச் கொண்ட டச் ஸ்கிரீன் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு கேமராவின் மூலமாக வீடியாக்களை பதிவு செய்து கொள்ள முடியும். மற்றொரு கேமரா மூலமாக உங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் பார்த்து பேசும் வீடியோ காலிங் வசதியை தரும்.

இது போன்ற உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த டேப்லட்.இதில் வாடிக்கையாளர்களின் நன்மைக்காக நெட் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

மல்டி டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இந்த மாடல் புது விதமான நிறங்களில் வெளி வந்துள்ளது.

10.1 இன்ச் திரை கொண்டுள்ளது. நீங்கள் டைப் செய்து கொள்ள வசதியாக உள்ள நம்பர் பேட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் உள்ள அட்ஜஸ்மன்ட் மூலமாக இதன் ஒளியை எளிதில் கூட்டவோக் குறைக்கவோ முடியும்.

இதில் உள்ள யூஎஸ்பி மற்றும் புளூடூத் மூலமாக எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.இதில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் உழைக்கும் தன்மைக் கொண்டுள்ளது.

ஆகவே உங்களது பேச்சு துண்டிக்கப்படாமல தொடர்ந்து கொண்டே இருக்கும்.இதில் வைபை வசதி உள்ளதால் அதி வேகமாக நெட் வசதியைப் பெறமுடியும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...