Sunday, 6 November 2011

இனி கண்ணாடி தட்டில் தகவல் சேமிக்கலாம்




ஆய்வொன்றின் மூலம் கண்ணாடித் தட்டுக்களில் தகவல்களை சேமிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ரான்ஸ்போமர் திரைப்படத்தில் கதாநாயகனால் ஏலத்தில் விடப்படும் அவனது தாத்தாவின் மூக்கு கண்ணாடியில் தரவு சேமிக்கப்பட்டிருப்பதாய் சித்தரித்திருப்பார்கள்.

அது தற்போது உண்மையாக்கப்பட்டுள்ளது.

Southampton University ஒளியியல் ஆராட்சிப் பிரிவினர் கண்ணாடி படிகத்தில் பாரிய அளவில் தகவல் சேமிக்கலாம் எனக் கண்டுபிடித்துள்ளனர்.

சிறிய கண்ணாடித் துகளில் 50GB இற்கு மேற்பட்ட அளவில் தகவல் சேமிக்க முடியும் என தெரிவித்த அவர்கள் இக் கொள்ளளவு புளூ ரே தட்டின் கொள்ளளவை விட அதிகம் என்பதை சுட்டிக்காட்டினர்.

லேசர் ஒளிக்கற்றை மூலம் கண்ணாடியினுள் சேமிப்பு நினைவகத்தை உருவாக்கலாம் என தெரிவித்தனர்.

முதற்கட்ட ஆராட்சிகள் வெற்றி பெற்ற நிலையில், கண்ணாடியிலான கணினி வன்தட்டுக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

லிட்டுவேனியன் கம்பெனியின் நிதி உதவியுடன் ஆராட்சி நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இவ் ஆராட்சி முற்றுப் பெறும் தருணத்தில் கணிணி தொழில்நுட்பத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துமென நம்பப்படுகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...