உங்கள் கணணியை முற்று முழுதாகவே தமிழில் மாற்ற நம்மில் பலருக்கு ஆசை இருக்கலாம் ஆனால் எவ்வாறு மாற்றுவது? அதற்கு எவ்வாறான மென்பொருட்கள் தேவே? இது இலவசமாக கிடைக்குமா ? பலரின் எதிர்பார்பு
இந்த மென்பொருளை தரவிறக்க இந்த சுட்டி அழுத்தவும்
நெறிமுறைகள்
எச்சரிக்கை: உங்களிடம் BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால், LIP -ஐ நிறுவுவதற்கு முன் அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panel -ஐ திறந்து, System and Security என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும்.
Windows 7 LIP -இன் 32-பிட் மற்றும் 64-பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள் தனித்தனியே கிடைப்பதால், பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன், Windows 7 -இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்: Windows 7-இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை, பின்வருமாறு தீர்மானிக்கலாம்:
Start பொத்தானைக் கிளிக் செய்தபின், கணினி என்பதில் வலது கிளிக் செய்து, Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணினி குறித்த அடிப்படைத் தகவலை இது காண்பிக்கும்.
LIP_ta-IN-32bit.mlc
அமைப்பு வகைக்கு, அமைப்பு என்ற பிரிவைப் பார்க்கவும். உங்கள் Windows 7 இயக்க முறைமை, 32-பிட் இயக்க முறைமையா அல்லது, அது 64-பிட் இயக்க முறைமையா என்பதை இது காட்டும்
32-பிட் பதிப்பை நிறுவ, நீங்கள் இவற்றை செய்யலாம்:
- தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், பின்னர் LIP -ஐ நிறுவ Open என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது
- தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்
- கோப்பை உங்கள் கணினிக்கு நகலெடுக்க Save என்பதைக் கிளிக் செய்யவும்,
- LIP -ஐ நிறுவ, பதிவிறக்கிய கோப்பிற்கு சென்று, அதை இருகிளிக் செய்யவும்
Posted in:
0 comments:
Post a Comment