Sunday, 6 November 2011

இலகுவாக உங்கள் புகைப்படங்களுக்கு குரல் வடிவம் கொடுக்க ஒரு இணையதளம்




உங்கள் படங்களுக்கு ஓர் வண்ணமயமான பின்னணி சேர்த்து உங்கள் இனிமையான குரலினை படங்களுக்கு சேர்த்து உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது Fotobabble என்ற தளம்.

முதலில் இந்த தளத்திற்கு சென்று Get started என்பதை கிளிக் செய்து உங்கள் முகநூல் கணக்கில் இந்த செயலியினை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தளத்திலும் ஒரு கணக்கினை திறந்து கொள்ளவும்.

இப்போது உருவாகும் Create a fotobabble என்ற பக்கத்தில் உங்கள் கணணியில் இருந்தோ அல்லது முகபக்கத்தில் இருந்தோ அல்லது இணையத்தில் இருந்தோ படத்தினை தரவிறக்கம் செய்து கொண்டு Create என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது நீங்கள் தரவிறக்கம் செய்த புகைப்படமும் அதற்கு இணைக்கப்பட வேண்டிய பின்னணியும் தோன்றும். பின்னணியை தெரிவு செய்து பின்னணி படத்தில் சேர்த்ததும் படத்தின் கீழே Record என்பதை கிளிக் செய்ததும் பதிவு செய்ய தொடங்கியதும் உங்கள் குரலினை பதிவு செய்துகொண்டு கீழே save என்பதை கிளிக் செய்து சேமித்து கொள்ளவும்.

இப்போது உங்கள் குரல் பதிவு செய்யப்பட்ட படத்தினை தளத்தில் கொடுக்கப்பட்ட சமூகவலைத்தள இணைப்புகள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். அத்துடன் உங்கள் இமெயில் மூலம் அனுப்புவதற்கான கோடிங் மற்றும் வலைத்தளங்களில் பகிர்வதற்கான கோடிங் என்பனவும் தரப்பட்டுள்ளது.


இணைய  முகவரி

1 comments:

Interesting, great job and a debt of gratitude is in order for sharing such a decent blog.
internet speed booster

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...