Sunday 30 October 2011

டிவி யை இயக்க கையசைப்பு போதும் ரிமோட் வேண்டாம்


கை அசைத்தால் “டிவி’ இயங்கும்; விரல் ஆட்டினால் சேனல் மாறும், சவுண்ட் கூடும் குறையும். இப்படியொரு தொழில்நுட்பம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “டிவி’யை இயக்க ரிமோட் கன்ட்ரோல் முறை உள்ளது; பல நாடுகளில், தொடுதிரை வசதியும் வந்துவிட்டது. இப்போது அதையும் தாண்டி புதிய தொழில்நுட்ப வசதி வந்து விட்டது.
டிவி’யை இயக்க ரிமோட்டை தேடவேண்டாம்; பட்டனை தட்டவேண்டாம். கை அசைத்தால் போதும் “டிவி’ இயங்கும்; விரல் ஆட்டினால் சேனல் மாறும், சவுண்ட் கூடும் குறையும். இப்படியொரு புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளது அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனம். அமெரிக்காவில் புருஷெல்ஸ் நகரை சேர்ந்த சாப்ட்ஹைனடிக் என்ற நிறுவனம், டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவன கூட்டுடன் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது.
இந்த தொழில்நுட்பத்திற்கு 3-ஈ சைகை என்று பெயரிட்டு உள்ளது. இத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 3-ஈ வெப்கேமராவை “டிவி’யின் மேல் முகப்பு பகுதியில் பொருத்த செய்கிறது. இந்த கேமரா முன் நாம் நின்று கொண்டு கை அசைக்கும் போது அது பதிவாகி “டிவி’யினுள் செலுத்தப்பட்டு அது இயங்குகிறது. நம்முடைய ஒவ்வொரு அசைவுக்கு தகுந்தாற் போல் “டிவி’ இயங்கும் படி இந்த தொழில்நுட்பம் வழி செய்கிறது. விரல்களை ஆட்டும் போது சேனல் மாறவும், சவுண்ட் கூட குறைய செய்யும். இந்த தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...