மனிதர்களின் ஆறாவது விரலாகவே மாறிப்போய்விட்டது செல்போன்கள். ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பது போல அலுவலகப் பணிக்கு ஒன்று, குடும்ப தொடர்புக்கு ஒன்று எனவும் இரண்டு சிம்கள் கொண்ட மொபைல் போன்கள் வந்துவிட்டன.
படம் பிடிக்க, வீடியோ எடுக்க, பாட்டு கேட்க, மின்னஞ்சல் பார்க்க…. என பல்வேறு உபயோகத்துக்காக செல்போன்கள் தேவைப்படுவதால், அவற்றுக்கு சக்தி அளிக்கும் பேட்டரி முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது. இதனால் செல்போன் வாங்கு பவர்கள் அதன் பேட்டரி எத்தனை மணி நேரத்துக்கு உழைக்கும் என்பதை கவனிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் எல்லா இடங்களிலும் பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சார வசதி இருப்பதில்லை. எனவே சூரிய ஒளியில் சார்ஜ் ஆகும் பேட்டரி கொண்ட செல்போன்கள் சந்தைக்கு வந்தன. இந்த வரிசையில் தேவைக்கு ஏற்ப தானாகவே சார்ஜ் ஆகும் செல்போன் ஒன்றை நோக்கியா நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த வகை செல்போன்களை பயன்படுத்தும் போதும், அது அசையும் போதும் தானாகவே சார்ஜ் ஆகிவிடும். இதற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
அசையும் தன்மையுள்ள `படிக தொழில் நுட்பத்தின்’ அடிப்படையில் இந்த செல்போன் இயங்குகிறது. தற்போது ஆய்வு நிலையில் உள்ள இந்த தொழில்நுட்பம் விரைவில் முழுமையடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
0 comments:
Post a Comment