Sunday 30 October 2011

வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி




வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம்.இந்த வீடியோ விளக்கத்தை நீங்களும் சம்ர்பிக்கலாம் என்பது தான் இன்னும் விஷேசமானது.

ஆம் இணையவாசிகள் தங்களை கவர்ந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தை இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.இதை தான் வீடியோ விளக்கம் மூலம் வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பது என்று வோர்டியா பெருமையுடன் குறிப்பிட்டு கொள்கிறது.

இணையவாசிகள் சமர்பிக்கும் வார்த்தை விளக்க விடியோக்கள் முகப்பு பக்க்த்திலேயே அவர்கள் புகைப்படங்க்களோடு வரிசையாக இடம் பெறுகின்றன.அவற்றில் கிளிக் செய்தால் விளக்கத்தை கேட்கலாம். சமீபத்தில் சம்ர்பிக்கப்பட்டவை முதலில் இடம் பெறுகின்றன.மற்றவற்றை தேடிப்பார்க்கலாம்.

எந்த‌ வார்த்தைக்கான பொருள் தேடினாலும் அதற்கான அகராதி அர்த்தம் வந்து நிற்கிறது.அந்த சொல்லின் பயன்பாடு போன்ற விவரங்களும் கொடுக்கப்படுகிறது.கூடவே அந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தையும் காணலாம்.அதாவது அந்த சொல்லை யாராவது வீடியோ மூலம் விளக்கியிருந்தால்!இல்லையென்றால் நீங்கள் கூட விளக்கத்தை சமர்பிக்கலாம்.

ஒரே வர்த்தைக்கு பலர் விளக்கம் அளித்திருந்தால் அவை அனைத்துமே இடம் பெருகின்றன.உறுப்பினர்கள் அவற்றுக்கு வாக்களிக்கலாம்.அந்த வாக்குகளின் அடிப்படையில் அவர் வரிசைப்படுத்தப்படும்.

சமீபத்திய விடியோ,அதிகம் பார்க்கப்பட்ட விடியோ என்னும் தலைப்புகளிலும் விளக்கங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சொல்லுக்கு ஒரு அழகு உண்டு.தனி நபர்கள் குறிப்பிட்ட சொல் தங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி விளக்கும் போது அந்த அழகை உணர முடியும்.அதே நேரத்தில் தனிப்பட்ட விளக்கஙக்ளை கேட்கும் போது ஒரு சொல்லின் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ள முடியும்.உறுப்பினர் அனுபவம் சார்ந்து அதன் பொருளை விவரிப்பதால் அந்த சொல்லின் பயன்பாடு சார்ந்து அதனை புரிந்து கொள்வதும் சாத்தியமாகும்.

இப்படி வீடியோ விளக்கத்தை இணைப்பதன் முலம் அகராதிகளுக்கே புதிய பரிமாணத்தை வோர்டியா கொண்டு வந்து விடுகிறது.

இணையவாசிகள் சமர்பிக்கும் விளக்கம் தவிர துறை சார்ந்த நிபுணர்களின் விளக்கஙக்ளும் சேர்க்கப்பட்டு வருகின்றன.சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு ஆங்கில மொழி சொற்களே இடம் பெற்றுள்ளன.விரைவில் மற்ற மொழிகளையும் இணைக்கு திட்டம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் பங்கேற்கு ஆர்வம் உள்ளவர்களை வர‌‌வேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்சிரீதியிலான அகராதி என்னும் புதிய வகையான அகராதியாக இந்த தளம் உருவாகியிருப்பதாக பாராட்டப்படுகிற‌து.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...