முன்னணி மொபைல் நிறுவனமான நோக்கியா தமது அடுத்த படைப்பை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. நோக்கியா-801 என்ற பெயரில் வரும் இந்த புதிய மொபைல் ஸ்டைலாகவும், தகுந்த விலையிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய மொபைல் சிறந்த டிஸ்ப்ளேயும் தொடு வசதியும் நவீன் தொழில் நுட்பமும் ஒருங்கே கொண்டுள்ளன.
இந்த மொபைல் உலக அளவில் எண்ணற்ற வாடிக்கையாளர்களைத் தன்வசப்படுத்திவிடும் என நம்பப்படுகிறது. அந்த அளவிற்கு இது சகல வசதிகளுடன் வரவிருக்கிறது. குறிப்பாக இதன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் ப்ராஸஸர் தரமான செயல் திரனுக்கும், மல்டிமீடியாக்களை இயக்குவதிலும் முக்கிய பங்கை வகிக்கும்.
நோக்கியா-801ன் அமோலட் தொடுதிரை 3.8 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயில் படங்களை ஸ்க்ரோல் செய்யலாம் மற்றும் சுழல வைக்கலாம். மேலும் இந்த அகல திரையில் வீடியோ காட்சிகளைப் பார்ப்பது புதிய அனுபவத்தைத் தரும்.
நோக்கியா-801ன் கேமராவை எடுத்துக் கொண்டால் அது ஸினான் ப்ளாஷ் கொண்ட 16 மெகா பிக்ஸல் கார்ல் சிஸ் கேமாரவாகும். இது மற்ற மொபைல்களில் இல்லாத ஒன்றாகும். மேலும் இந்த கேமராவில் படங்களையும் காட்சிகளையும் மிக துல்லியமாக எடுக்கலாம்.
இதன் மெமரியைப் பார்த்தால் இது 32 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய அளவிற்கு 16 ஜிபி இன்டர்னல் மெமரி சேமிப்பைக் கொண்டிருக்கிறது. அதனால் அதிகமான அளவில் இந்த மொபைலில் நாம் தகவல்களே படங்களை மற்றும் காட்சிகளை சேமித்து வைக்க முடியும்.
எப்பொழுதுமே நோக்கியா மொபைல்களில் பேட்டரி திறன் தனிச் சிறப்பு பெற்றிருக்கும். அந்த வகையில் இந்த போன் 1,550 எம்ஏஎச் நான் ரிமூவபில் லித்தியான்-அயான் பேட்டரியைக் கொண்டுள்ளது. வழக்கமாக நோக்கியா மொபைல்களில் பேட்டரியைத் தனியாக எடுத்து விடலாம். ஆனால் இந்த மொபைலில் அவ்வாறு எடுக்க முடியாது. அதன் மூலம் இதன் மின் திறன் மூலம் நீண்ட நேரம் பேச முடியும். அதே நேரத்தில் இது மொபைலுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
மற்ற சிறப்பம்சங்களைப் பார்த்தால் தகவல் பரிமாற்றத்திற்கான இதன் ப்ளூடூத் மற்றும் வைபை வசதிகள் மிகச் சிறப்பாக உள்ளன. மேலும் இதில் ஜிபிஎஸ் வசதியும் உள்ளது. மேலும் இந்த மொபைல் மிக ஸ்டைலாக, சிறந்த வண்ணம் கொண்டு ராயல் லுக்கோடு வரவிருக்கிறது
0 comments:
Post a Comment