Thursday, 27 October 2011

virus தாக்கிய fileஐ திரும்ப பெறுவது எப்படி?




நீங்கள் pen Drive உபயோகிப்பவராக இருந்தால் நிச்சயம் இந்த பிரச்சினைக்கு உட்பட்டு இருப்பீர்கள் .இனிமேல்  வைரஸ் தாக்கிய பைலை எப்படி திரும்ப பெறுவது என்று பார்ப்போம்.



1.pen Drive இல் இருந்த பைல் ஐ Antivirus  அழித்த பிறகு காணவில்லை

2.pen Drive இன் used space கூடதலாக காட்டுகிறது ஆனால் அதற்குறிய பைல் pen drive இல் இல்லை

3.நீங்கள் மீளப்பெற நினைக்கும் பைல் இப்படியாக இருக்க வேண்டும்.(.DAT,.FLV,.MP4,.VOB,.MP3,.ZIP,.RAR,.PDF,.HTML,.RTF,.DOC,.JPG,.PNG,.TXT.....)

4.நீங்கள் மீளப்பெற நினைக்கும் பைல் .exe இல் இருந்தால் மீளப்பெற முடியாது.

இந்த செய்திக்கு உங்கள் பிரச்சினை பொருந்தினால் நிச்சயமாக fileஐ திரும்ப பெறமுடியும் .
இதை நிச்சயமாக மீளப்பெற முடியும் என்பதற்குரிய காரணம் என்ன வென்றால் உங்களுடைய pen drive இல் ஒரு போல்டருக்குல் வைரஸ் இருந்தால் Antivirus software அந்த Virus ஐ அழித்து விட்டு அந்த Folder ஐ system Hidden செய்து விடும்.ஆனால் அந்த போல்டர் உங்களுடைய pen drive இல் தான் இருக்கிறது.system Hidden Folder ஐ எப்படி தெரிய வைப்பது என்று பார்ப்போம்.

start > control panel > folder Options > view

Show hidden files and folder என்பதை தெரிவு செய்து கொண்டு Hide protected operating system files [Recommended] என்பதை கிளிக் செய்யுங்கள்.ஒரு செய்தி வரும் அதற்கு yes என்பதை கொடுத்து விட்டு OK செய்து கொள்ளுங்கள்.







இப்போது உங்களுடைய pen Drive இற்குல் செல்லுங்கள் அந்த பைல் இருப்பதை காணலாம்.
இந்த செயலை மேற்கொள்ளும்போது நீங்கள் நல்ல antivirus பயன்படுத்துவது நல்லது பாதுகாப்பாகவும் இருக்கும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...