Thursday, 27 October 2011

3D அனிமேஷன் உருவாக்க




மனிதன் இந்த அளவுக்கு கற்பனை செய்யவிட்டால் கணினி உலகத்தை யாரும் அடைந்திருக்க முடியாது. அதே போல் தான் கணினி செயல்பாட்டின் கற்பனை 2D, 3D போன்ற அனிமேஷன்கள், அந்த வகையில் தற்போதைய நிலையில் 3D பயன்பாட்டில் உள்ளது. 3D வசதியின் மூலமாக கற்பனை உலகையே படைத்து விட முடியும். அந்த அளவுக்கு 3Dயில் வசதி உள்ளது. நாம் அனைவரும் 3D படங்கள் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கும். செயற்க்கையான முறையில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களாக இருந்தாலும் அவை மிகவும் தத்ருபமாக இருக்கும். சரி இவ்வாறு உருவாக்கப்படும் திரைப்படங்கள் யாவும் 3D மென்பொருள்களின் உதவியுடன் மட்டுமே முடியும். இதுபோன்று 3D அனிமேஷன்களை உருவாக்க மாயா, 3ds Max போன்று பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. அதே போல 3Dஅனிமேஷன்களை எளிமையான முறையில் உருவாக்க DAZ Studio என்ற மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 



சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று add to cart என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் subscribe me என்னும் பொத்தானை அழுத்தவும்.



அடுத்ததாக DAZ தளத்தில் உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளவும். பின் அந்த கணக்கை ஆக்டிவேட் செய்து கொள்ள உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு லிங் அனுப்பபடும் அதை பயன்படுத்தி கணக்கை உறுதிபடுத்தி கொள்ளவும்.



அடுத்து தோன்றும் விண்டோவில் checkout என்னும் பொத்தானை அழுத்தி உறுதிபடுத்தவும். பின் உங்களுடைய கணக்கை திறந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். லைசன்ஸ் கீயும் இந்த கணக்கிலேயே இருக்கும். மென்பொருளை தரவிறக்கம் செய்யும் போது இணைய இணைப்பு அதிவேகமாக இருந்தால் மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். ஏனெனில் மென்பொருளானது 430எம்.பி அளவுடையது ஆகும்.




இந்த DAZ Studio 4 பற்றி ஆன்லைனிலேயே கற்றுதருகிறனர். அதை பயன்படுத்தி எளிமையாக இந்த மென்பொருளை பயன்படுத்த முடியும். மேலே குறிப்பிட்ட படமானது DAZ Studio 4 யை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது ஆகும். இதே போல பல்வேறு அனிமேஷன்களை உருவாக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளானது 7/31/2011 வரை மட்டுமே இலவசமாக பெற முடியும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...