Thursday 27 October 2011

சூரிய சக்தியில் இயங்கும் புதிய நெட்புக் அறிமுகம்




சூரிய சக்தியில் சார்ஜ் செய்து கொள்ளும் புதிய நெட்புக்கை மார்க்கெட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சாம்சங் என்சி-215 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நெட்புக்கின் பேட்டரி செயல் திறனில் பட்டையைக் கிளப்பும் என்று தெரிகிறது.

இது ஒரு போர்ட்டபுள் நெட்புக் ஆகும். இதை ப்ளக் இன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ப்ளக் இன் செய்யாமல் மொட்டை மாடியிலோ அல்லது மணல் வெளியில் சூரிய குளியல் செய்யும் போதுகூட இதில் இண்டர்நெட் ப்ரவுசிங் மற்றும் மற்ற வேலைகளைச் செய்ய முடியும். மேலும் இதில் இமெயில் மற்றும் ஸ்கைப் வசதியும் உள்ளன.

இதனுடைய முக்கிய சிறப்பு என்னவென்றால் இதன் லிட் கவரில் உள்ள சோலார் பேனல் ஆகும். இது சூரிய ஒளி மூலம் தானாக சார்ஜ் செய்து கொள்ளும். மேலும் இதை சார்ஜ் செய்வதற்கு இதை ப்ளக் இன் செய்ய வேண்டிய அவசியமில்லை. சுவிட்ஜ் ஆப் மோடில் இருந்தால் கூட அது தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும்.

இதனுடைய எக்கோ மோடும் இதற்கு மிகச் சிறப்பை அளிக்கிறது. குறிப்பாக இதைத் வடிவமைத்தவர்கள் பேட்டரிக்கு அதிகம் கவனம் செலுத்தி இருக்கின்றனர். இதன் எக்கோ மோட் மின் சக்தியை சரியாக சேமித்து கட்டுப்படுத்தி சம அளவில் வழங்குகிறது. மேலும் இந்த டிவைஸ் சிறந்த மானிட்டரிங் சிஸ்டம் கொண்டு சோலார் பேனல் வழியாக மின் திறனை சரியான முறையில் கவனித்து வருகிறுது.

இந்த நோட்புக் சூரிய ஒளியில் சார்ஜ் ஆகிவிடுவதால் கார்பன் விளைவுகளைக் கூட நாம் உணர முடியும். குறிப்பாக மின்சாரம் இல்லாத வேளையிலும் இந்த நோட்புக்கை சூரிய மின்சக்தி மூலம் இயக்க முடியும்.

இந்த நோட்புக் 1.66கிஹெர்ட்ஸ் ஆட்டம் கொண்டு செயல்படுகிறது. ஆனால் இதில் மல்டி டாஸ்க் செய்வது சற்று கடினமாக இருக்கும். இது 3 3.0 யுஎஸ்பி போர்ட்களை கொண்டு தரமான வெப்கேம் பெற்றிருக்கிறது. இதில் சிடி மற்றும் டிவிடி டிரைவ் இல்லை. அதனால் இது ஒரு குறைவாகவே பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...