Thursday, 27 October 2011

உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி ?




ஒவ்வொருவருக்கும் தன் குழந்தையின் உருவம் / அழகு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.உயரக் குறைவு நிறையப் பேரின் மனத் தாழ்வுக்கு காரணமாக இருக்கிறது.உயரம் என்பது தனியே உண்கின்ற உணவினால் மட்டும் தீர்மானிக்கப் படுவதில்லை.

உயரத்திற்கான பிறப்புரிமைக் காரணியே(genetic factor) ஒருவர் இறுதியில் எவ்வளவு உயரத்தை எட்டிப் பிடிப்பார் என்று தீர்மானிக்கிறது. இதுGrowth potential எனப்படுகிறது. இவ்வாறு பிறப்புரிமைக் காரணியால் தீர்மானிக்கப்பட்ட உயரத்தை விடஅதிகமாக  நாம் எவ்வளவுதான் உணவை உட்கொண்டாலும் நம்மால்  வளர முடியாது.

ஆனால் வளர்ச்சிக் காலத்தில் தேவையான அளவு உணவு வழங்கப் படாவிடால் பிறப்புரிமைக்  காரணியால் தீர்மானிக்கப்பட்ட உயரத்தை ஒருவர்  அடையாமலேயே அவருடைய வளர்ச்சி முற்றுப் பெற்று விடலாம்.

இதே போல் குழந்தைகளுக்கு சிறுவயதிலே கட்டுப்படுத்தப் படாத தொடர்ச்சியான நோய்கள் (ஆஸ்த்மா /நீரழிவு)போன்றவை ஏற்பட்டாலும் அவர்களால் அவர்களின் உச்சகட்ட க் உயரத்தை அடைய முடியாமல் போகும்.
அதேபோல் சிறு வயதில் மன உளைச்சலுக்கு உட்பட்டு வாழும் குழந்தைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படலாம்.இது தவீர நேரடியாகவே ஒருவரின் வளர்ச்சியைத் தடுக்கும் நோய்கள் இருக்கின்றன.

ஒருவரின் உயரத்திற்கான பிறப்புரிமைக் காரணியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தாய் தந்தையரின் உயரம். பிறப்பிலே உயரம் குறைந்த தாய் தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகளும்உயரம் குறைவாக இருப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரும் என்று அறிய ஆவலாக இருக்கும்.

அதற்காக இந்தச் சுட்டியில் சென்று அங்கே உள்ள கணிப்பானில் உங்கள் உயங்களைக் கொடுப்பதன் மூலம்அறிந்து கொள்ளுங்கள்.அதிலே உங்கள் குழந்தை  வளரக் கூடிய சாத்தியமான உயரமே கிடைக்கும்..உங்கள் குழந்தைக்குரிய சூழல்,உணவு,மருத்துவ வசதிகளைப் பொறுத்தே அந்த உயரத்தை அடையுமா என்பது தீர்மானிக்கப்படும் .

இணையத்தள முகவரி

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...