Thursday 27 October 2011

புதுமையான கினி ஆடியோ சிஸ்டம்




எல்இடி விளக்குடன் கூடிய புதிய மியூசிக் சிஸ்டத்தை கினி அறிமுகம் செய்ய உள்ளது.

பார்ப்பதற்கு சாதாரண குண்டு பல்பு போன்று இருக்கும் இதில் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 டபிள்யூ எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மியூசிக் ஸ்பீக்கர்களில் இருந்து பாடல்கள் ஒலிக்கும் போது இந்த லைட் எரிவதைக் காண முடியும். இந்த ஸ்பீக்கர் சிஸ்டத்தை ஐபோன், ஐபோட் போன்றவற்றில் இணைத்து அதன் மியூசிக் ட்ராக்ஸைக் கேட்க முடியும்.

இந்த மாடல் வயர்லெஸ் கனெக்ஷன் உடையது என்பதால் சுலபமாக எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கேட்கலாம். இதனுடைய இயக்கம் அனைத்தும் ஸ்டான்அலோன் யூனிட்டின் அடிப்படையில் இயங்குகிறது. இதில் லைட் சாக்கெட் டிவைஸ் உள்ளது.

இந்த பல்பை எடிசன் லைட் சாக்கெட்டிலும் பொருத்திக் கொள்ளலாம். இதனுடைய ஆடியோ சாதனத்தை ஆப்பிள்-பின் டாக்கிலோ அல்லது மற்ற ஆக்சிலரி இன்புட்டிலோ தாராளமாக பயன்படுத்தலாம். இந்த ஸ்பீக்கர் வித்தியாசமாக இருந்தாலும் இதனைப் பொருத்துவது மிகவும் எளிது என்று கினி நிறுவனத்தின் உயர் அதிகாரி ரையான் கியோனார்டோ கூறியிருக்கிறார் .

இதன் ஆடியோ பல்பு 5 வாட்ஸ் வரை எரியும் தன்மைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் இத்தகைய ஆவலைத் தூண்டும் மியூசிக் ஸ்பீக்கர் சிஸ்டம் வரும் அக்டோபரில் வெளிவர உள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...