Thursday, 27 October 2011

4 சிம் கார்டு பொருத்தும் வசதியுடன் வரும் புதிய மொபைல்




4 சிம்களைக் கொண்ட மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது டெக்னோ நிறுவனம். இரண்டு சிம்களைப் பயன்படுத்திய காலம் போய் இப்பொழுது புதிய 4 சிம் கொண்ட புதிய மொபைல் வர இருக்கிறது. டி-4 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் அடுத்த மாதம் நெய்ரோபியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இந்த தகவலை டெக்னோ நிறுவன மார்கெட்டிங் மேனேஜர் திரு.ஆடம் ஜின் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். நோக்கியா, சாம்சங் போன்ற மொபைல் நிறுவனங்களுக்கு டெக்னோ மொபைலின் இந்த புதுமை சற்று கலக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் வசதியான வாய்ப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அனைத்து நிறுவனங்களும் டியூவல் சிம் வசதி கொண்ட மொபைலை தயாரித்து வெற்றி கண்ட நேரத்தில் சில நிறுவனங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட சிம்களை உருவாக்குவது பற்றி யோசித்திருப்பது மிகவும் அரிய விஷயமாகத் தோன்றுகிறது.

அந்த வகையில் டெக்னோ நிறுவனமும் இந்த பெருமைக்கு உரியதாகத் தெரிகிறது. இந்த மொபைல் முதலில் கென்யன் மார்கெட்டில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...